கராச்சி: கிரெய்க் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தது. அந்த அணி 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தது.
இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி முல்தான் நகரில் தொடங்குகிறது. கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் ஜனவரி 25-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் வரும் 10-ம் தேதி இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.