ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்கும் காட்டாங்குளத்தூர் செந்தமிழ்நகர் பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்படுமா என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கிறார்கள். சென்னை தாம்பரத்தை அடுத்த மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி காட்டாங்குளத்தூர் செந்தமிழ் நகர். பொத்தேரி – காட்டாங்குளத்தூர் இடையே ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செந்தமிழ் நகர் மற்றும் அதன் அருகேயுள்ள விஜிஎன் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழில் செய்வோர், தொழிலாளர்கள் என ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சென்னை நகர வாசிகள் பலர் அமைதியான, நெருக்கடி இல்லாத, காற்றோட்டம் மிக்க பகுதி என கருதி தொடர்ந்து இப்பகுதியில் குடியேறிய வண்ணம் உள்ளனர்.