சென்னை: வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்களுக்கு கட்டுப்பாடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்தது. வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் கும்பலாக நின்று சோதனை மேற்கொள்ளக் கூடாது. வாகன சோதனை நடத்தும் உதவி ஆய்வாளர், காவலர் ஒருவர் மட்டுமே அங்கு இருக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post 2 பேர் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் appeared first on Dinakaran.