விஷ்ணு விஷால் – ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பெண் குழந்தை பிறந்திருப்பது குறித்து விஷ்ணு விஷால், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ஆர்யன் அண்ணனாகிவிட்டார். இன்று எங்களுக்கு 4-வது திருமண நாளாகும். அதே நாளில் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.