சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையை, ரசிகர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி போட்டியை காண்பதற்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனைவரும் போட்டியின் தினத்தில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.