கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய 2 அணிகளுமே இதுவரை 3 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது.