ஸூரிச்: சு விட்சர்லாந்து நாட்டின் ஸூரிச் நகருக்கு அருகில் செலியிரன் என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவர் போலோங்கா என்ற உயர் ரக நாய்களை வளர்த்து வந்தார். கடந்த வாரம் வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, 2 நாய்களை காணவில்லை.
அந்த நாய்களை கொடுக்க வேண்டும் என்றால் ரூ.8 கோடி தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்து எழுதிய கடிதம் கிடந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கடந்த 6ம் தேதி ஸூரிச் விமான நிலையத்தில் நார்வே நாட்டை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். நாய்களை கடத்தி ரூ.8 கோடி பிணை தொகை கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 2 நாய்களை கடத்தி ரூ.8 கோடி கேட்டவர் கைது appeared first on Dinakaran.