2 லட்சம் பேருக்கு செயற்க்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப பயிற்ச்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஆந்திர அரசு பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ளது.
படித்த இளைஞர்களுக்கு பெரிய நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெருக்கும் விதமாக ஏஐ தொழில்நுட்ப பயிற்ச்சி அளிக்க பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஆந்திர ஐடி அமைச்சர் லோகேஷ் முன்னிலையில் நேற்று அமராவதியில் பரஸ்பர ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஓராண்டிற்குள் சுமார் 2 லட்சம் பேருக்கு இப்பயிற்ச்சி அளிக்கப்பட உள்ளது. 50 கிராமீய பொறியியல் கல்லூரிகளில் 500 பேராசிரியர்களுக்கும் பயிற்ச்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மேலும் 10 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஏஐ மற்றும் க்ளவுட் பயிற்ச்சியும் அளிக்கப்பட உள்ளது. இது தவிர, 30 ஐடிஐ கல்லூரிகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு டிஜிட்டல் உற்பத்தியில் ஏஐ தொழில்நுட்ப பயிற்ச்சி அளிக்கப்பட உள்ளது.