
பெங்களூரு: இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 255 ரன்களும், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களும் எடுத்தன.
34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 0, தேவ்தத் படிக்கல் 24, சாய் சுதர்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 26 ரன் களுடனும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

