புதுடெல்லி: குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தொழிலதிபர் ராபர்ட் வதேரா 2-வது நாளாக அமலாக்கத் துறை அலுவகத்தில் ஆஜரானார். அவரை பிரியங்கா காந்தி அலுவலக வாசலில் கட்டியணைத்து அன்பைப் பரிமாறி அனுப்பி வைத்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் நிலமோசடி வழக்குத் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, தொழிலதிபரும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ராபர்ட் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.