மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரண்டாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மகளிர் ப்ரீமியர் லீகின் மூன்றாவது சீசன் தொடங்கியது. இதில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உபி வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன. இதில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.