டாவோஸ்: உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கிறது. இதில், உலகளாவிய பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், உலகளாவிய வர்த்தகமும், விநியோகச் சங்கிலியும் துண்டிக்கப்படுவதால், அதிகப்படியான பணவீக்கத்திற்கு வழிவகுப்பதாக கூறப்பட்டுள்ளது.
மிக மோசமான நிலையில், உலகளாவிய பொருளாதாரம் ரூ.51 லட்சம் கோடி முதல் ரூ. 485 லட்சம் கோடி வரை இழப்பை சந்திக்கும். இதனால் உலக பொருளாதாரம் கொரோனா மற்றும் 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட மிக மோசமான வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது இதனால் ஏற்படும் கடும் சுமை இந்தியா, பிரேசில், துருக்கி உள்ளிட்ட நாடுகள் மீது விழும் என என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 2008 நிதி நெருக்கடி, கொரோனாவை விட உலக பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி அடையலாம்: டபிள்யுஇஎப் அறிக்கை appeared first on Dinakaran.