சென்னை: 2020ம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பணி வரன்முறை கோரி ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் சத்யா என்பவரின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு. தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு. ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post 2020ம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.