கோவை: “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்றது போல 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோற்பார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“தேர்தல் அரசியலில் மக்கள் வாக்களித்து தான் ஒருவர் முதல்வர் ஆகிறார். இதில் பிறப்பால் ஒருவர் முதல்வராகிறார் என்று எந்த அர்த்தத்தில் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார் என்று தெரியவில்லை. உதயநிநி ஸ்டாலின் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். அதை எப்படி குறை சொல்ல முடியும். தேர்தலில் மக்களை சந்தித்து வெற்றி பெற்று வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது. நான் திமுகவையோ, வாரிசு அரசியலையோ ஆதரித்து பேசவில்லை.