சென்னை: 2024ல் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு செய்யாததால் பலர் பாதிக்கப்பட்டதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் கே.சாமி அளித்த புகாரில் டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் பதில் தர டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது.
The post 2024ல் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக டிஜிபிக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.