புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4% அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரம் மாதந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலைவிட 9.9% அதிகம். ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.38,100 கோடி, மாநில ஜிஎஸ்டியாக ரூ.49,900 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 95,900 கோடி மற்றும் ஜிஎஸ்டி செஸ் ரூ.12,300 கோடி வசூலாகி உள்ளது.