புதுடெல்லி: 2024-25 பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2,52,200 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இதில் ரூ.1,92,446 கோடி செலவிடப்பட்டுள்ளதாவும், இது ஒதுக்கப்பட்ட நிதியில் 76% என்றும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குவதை ரெயில்வே நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை குறைந்த செலவில் வழங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்திய ரயில்வே புவியியல், கலாச்சாரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.