புதுடெல்லி: 2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடு 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "ஏப்ரல் 2000 முதல் மொத்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 1 டிரில்லியன் டாலரை எட்டியதன் மூலம் இந்தியா தனது பொருளாதார பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.