சென்னை: கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 1.06 லட்சம் சிறிய ரக சிலிண்டர் இணைப்புகளை வழங்கி, தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களையும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களையும் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்யும் போது எளிதாக கொண்டு செல்லும் வகையில், 10 மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிறிய வகை சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.