ஐநா: 2025ம் ஆண்டுக்கான ஐநாவின் வழக்கமான பட்ஜெட்டுக்கு இந்தியா ரூ.320 கோடி செலுத்தி உள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “ஐநா பங்களிப்புகளுக்கான குழுவின்படி, ஜனவரி 31ம் தேதி வரை, ஐநாவின் 35 உறுப்பு நாடுகள், தங்கள் வழக்கமான வரவு, செலவு திட்ட மதிப்பீடுகளை ஐநா நிதி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 30 நாள் காலக்கெடுவுக்குள் செலுத்தி உள்ளன. அதன்படி இந்தியா 2025ம் ஆண்டுக்கான நிதியாக ரூ.320 கோடியை கடந்த ஜனவரி 31ம் தேதி செலுத்தியது. இதனால் தங்கள் வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்திய 35 உறுப்பு நாடுகளின் கவுரவ பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. மேலும் ஐநாவின் வரவு, செலவு திட்டத்துக்கு சரியான நேரத்தில், முழுமையான நிதி பங்களிப்பை தரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது” என்று தெரிவித்தனர்.
The post 2025ம் ஆண்டுக்கான பங்களிப்பாக ஐநாவுக்கு இந்தியா ரூ.320 கோடி நிதி: 35 உறுப்பு நாடுகளின் கவுரவ பட்டியலில் இடம் appeared first on Dinakaran.