புதுடெல்லி: மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் 2025-26-ம் நிதியாண்டில் 10,000 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த இலக்கு ஆகும்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் விரிவான பட்ஜெட் ஆவணம் கடந்த திங்கள் கிழமை வெளியானது. அதில் 2025-26-ம் நிதியாண்டில் 10,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19-ம் நிதியாண்டில் இருந்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் இலக்கு தூரங்களை ஒப்பிட்டு பார்த்தால், இந்தாண்டு இலக்கு மிகக் குறைவு.