2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான சீனாவை அனுபவியுங்கள்.” என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் வரவேற்றுள்ளார்.
ட்ரம்ப் கெடுபிடியின் விளைவாக.. அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளி சீனா. அதுமட்டுமல்ல பொருளாதார போட்டியாளரும் கூட. இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். அதற்கு சீனாவும் பதில் வரி விதிக்க மற்ற நாடுகளுக்கு சலுகை அறிவித்து 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரியை நிறுத்திவைத்த ட்ரம்ப், சீனாவுக்கு மட்டும் 145% வரியை விதித்துள்ளது. இருப்பினும் சற்றும் தளராத சீனா தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறது.