புதுடெல்லி: வரும் 2025 பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை வக்பு மசோதா ஜேபிசி பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, வக்பு வாரி யங்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப் பப்பட்டது.