வாஷிங்டன்: 2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா மீது ஏற்றுமதி வரியை பரஸ்பரமாக உயர்த்தி உள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது. ஐபோன் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது. சீனாவில் தனது நிறுவன போன்களை பெருமளவு உற்பத்தி செய்து வந்தது.
சீனா, அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் தொடங்கிய நிலையில் சீனாவில் ஐபோன் உற்பத்திக்கான வாய்ப்பு குறைந்து காணப்பட்டது. இதனால் ஐபோன்கள் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க அதன் தலைமை நிர்வாக அதிகாரி முடிவு செய்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் விற்க 80% ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இந்திய சந்தைக்கான மொத்த ஐபோன்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post 2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும்: ஆப்பிள் நிறுவனம் appeared first on Dinakaran.