‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.’ என்ற குறள் வழியில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியின் குறைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுபவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். வியாழன் தவறாமல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டு நடப்பை அலசும் மருத்துவர் ராமதாஸ், ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக நேர்காணல் இது.
ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணியிலேயே பயணித்த பாமக-வுக்கு அண்மைத் தேர்தல்களில் அது கைகூடாமல் போனது ஏன்?