2026-ல் தான் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
’ஜனநாயகன்’ படத்தில் விஜய் நடித்து வரும் காட்சிகளின் படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிவடையவுள்ளது. அதற்குப் பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். இதனிடையே, ‘ஜனநாயகன்’ அக்டோபரில் வெளியீடு என்று படக்குழுவினர் போஸ்டர்களில் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால், தற்போது அதற்கு சாத்தியமில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.