மயிலாடுதுறை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் 8-வது மகளிர் பெருவிழா மாநாடு நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி, தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறி, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை உதாரணமாக காட்டினார்.