புதுடெல்லி: 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு ராணுவ விமானம், இன்று (பிப். 5) பிற்பகல் ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.
முன்னதாக, விமானம் இன்று காலையில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விமானத்தில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அமெரிக்க ராணுவ விமானம் C-17, பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த 205 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.