புவனேஸ்வர்: 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, திறன்நிறைந்தவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார்.
ஒடிசாவில் நடந்த 18வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவஸ்) பேசிய பிரதமர் மோடி, "21ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது. இன்னும் பல தசாப்தங்களுக்கு உலகின் இளமையான, திறன்மிக்கவர்கள் உள்ள நாடாக இந்தியா திகழும். திறமையானவர்களுக்கான உலகின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும். அதற்கான ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது.