சென்னை: 24H துபாய் 2025-ல் 991 பிரிவில் 3-வது இடத்தை பெற்ற அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் 3-வது இடத்தைப் பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித்குமார், அவரது குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “24H துபாய் 2025 இல் அஜித் குமார் ஐயா மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் லோகோவை காட்சிப்படுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங்க்கு நன்றி.
நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் பெருமை சேர்ப்பதில் அஜித் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post 24H துபாய் 2025-ல் 991 பிரிவில் 3-வது இடத்தை பெற்ற அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு துணை முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.