புதுடெல்லி: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி வெள்ளிக்கிழமை இரவில் அவரது (ஹசீனா) முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஆடியோவில் ஷேக் ஹசீனா இந்தக் குற்றச்சாட்டினை வைத்துள்ளார். அதில் அவர், “நானும், ரெஹானாவும் உயிர் பிழைத்தோம். வெறும் 20 – 25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்புினோம். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது.