சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
மக்களின் உயிர்காக்கக்கூடிய உன்னத சேவை செய்வதற்கான பணி ஆணைகளை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி அதையெல்லாம் ஏதிர்கொண்டு தன் பணியை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது.
நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு உள்ளதற்கு கலைஞர் உருவாக்கின மருத்துவ கட்டமைப்பே காரணம். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரந்தோறும் அரசு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவக் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் தேவைபடுகிறார்கள். கிராமங்களில் இருந்தும் சிறிய சிறிய நகரங்களில் இருந்து டாக்டர்கள் வந்தால்தான் மக்களின் தேவை நிறைவுபெறும்.
சிறிய சிறிய நகரங்களில் இருந்தும் இத்தனை டாக்டர்கள் உருவாகி இருப்பதற்கு வித்திட்டவர் கலைஞர். உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 பல உயிர்களை காப்பாற்றி அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றி இருக்கிறது.
மக்களுக்கு அவசியமான தேவைப்படக்கூடிய மருந்துகள் மிகவும் மலிவு விலையில் கிடைக்க முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவத்துறை திட்டங்கள் இல்லை. மக்கள் மருத்துவர்களை நம்பி தங்களது உயிர்காக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
The post 2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.