மதுரை: மூன்றாம் நிலையில் இருந்து 2-ம் நிலைக்கு மதுரை விமான நிலையம் தரம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேர விமான சேவையும் தொடங்கியதால் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.