புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 45.53% வாக்குகளும், ஜார்க்கண்ட் இரண்டாம் கட்ட தேர்தலில் 61.47% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
மகாராஷ்டிரா வாக்குப்பதிவு நிலவரம்: மகாராஷ்டிராவில் நக்ஸல் பாதிப்பு மிகுந்த கட்சிரோலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 62.99% வாக்குகளும், தானே தொகுதியில் குறைந்தபட்சமாக 38.94% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மும்பை நகரத்தில் 39.34% வாக்குகளும், மும்பை புறநகரில் 40.89% வாக்குகளும், நாக்பூரில் 44.45% வாக்குகளும் பதிவாகி உள்ளன. அவுரங்காபாத் – 47.05%, புனே – 41.70%, நாசிக் – 46.86%, சத்தாரா – 49.82%, துலே – 47.62%, பால்கர் – 46.82%, ரத்னகிரி – 50.04%, நான்டெட் – 42.87%, லட்டூர் – 48.34% வாக்குகள் பதிவாகி உள்ளன. நான்டெட் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 41.58% வாக்குகள் பதிவாகி உள்ளன.