சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 24 வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது. இதன் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முழக்கத்தை வலியுறுத்தவும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.