சென்னை: 3 விமானங்களில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளாகினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.20 மணியளவில் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 172 பயணிகளும், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல், சிங்கப்பூரில் இருந்து 184 பயணிகளுடன் நேற்று சென்னைக்கு வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் விமான நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்படும் விமானம் மாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோல், நேற்று காலை 11.40 மணியளவில் சென்னையில் இருந்து மும்பைக்கு 167 பயணிகளுடன் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்லும் 3 ஏர் இந்தியா விமானங்கள், பல மணி நேரம் தாமதமானதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகுந்து நெரிசலுடன் காணப்பட்டது.
The post 3 விமானங்களில் இயந்திர கோளாறு; சென்னை விமான நிலையத்தில் 500 பயணிகள் பரிதவிப்பு: கூட்ட நெரிசலால் பரபரப்பு appeared first on Dinakaran.