சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு இன்னிங்ஸிலோ அல்லது பல்வேறு ஆட்டங்களிலோ 300 ரன்கள் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் 10 முறை 250-க்கும் அதிகமான ரன்கள் விளாசப்பட்டது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டுமே 8 முறை 250 ரன்களுக்கு மேல் வேட்டையாடி இருந்தது.
மேலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்திருந்தது. மேலும் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 166 ரன்கள் இலக்கை 9.4 ஓவர்களிலேயே எட்டி வெற்றி கண்டிருந்தது ஹைதராபாத் அணி. இந்த ரன் வேட்டையில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடி முக்கிய பங்கு வகித்திருந்தது. ஹைதராபாத் அணியை போன்று பல்வேறு அணிகளிலும் அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால் இம்முறை 300 ரன்கள் குவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.