புற்றுநோய் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்காக நாராயணா ஹிருதாலயா தொண்டு அறக்கட்டளைக்கு சன் குழுமம் 88 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் குழுமம் பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, புற்றுநோய் மற்றும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சன் குழுமம் 88 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டுவரும் நாராயணா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாக் சயின்ஸ் மற்றும் மஜூம்தார் ஷா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் செயல்பட்டுவரும் நாராயணா ஹிருதாலயா தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி மணியிடம் சன் குழுமம் சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். இந்த நிதியின் மூலம் 35 ஏழை, எளிய குழந்தைகளுக்கு புற்றுநோய் மற்றும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக நாராயணா ஹிருதாலயா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
The post 35 குழந்தைகள் சிகிச்சைக்கு சன் குழுமம் ரூ.88.62 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.