புதுடெல்லி: புற்றுநோய், அரிய வகை நோய்கள் மற்றும் இதர நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கான சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இவை புற்றுநோய், அரிய வகை நோய்களை குணப்படுத்துவதற்கான அத்தியாவசிய மருந்துகளாகும். 5% சலுகை அளிக்கப்படும் சுங்க வரிப் பட்டியலில் 6 உயிர்காக்கும் மருந்துகள் சேர்க்கப்படும்.இந்த மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மொத்த மருந்துகளுக்கு முழு விலக்கு மற்றும் சலுகை வரி பொருந்தும்.