கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் குமார் (38) என்பவருடைய விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக 4 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தயாரிக்க பயன்படும் உதிரிபாகங்கள், இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குமாரை கைது செய்து நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.
The post 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் appeared first on Dinakaran.