மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.