புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. முன்னொரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தனர். தற்போது இந்த நிலை மாறி உள்ளது. ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கனடாவுக்கு சென்று கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 2.78 லட்சத்தில் இருந்து 1.89 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது. பிரிட்டன் சென்று படிப்போரின் எண்ணிக்கை 1.2 லட்சத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைந்துவிட்டது.
இதற்கு காரணம் கல்வி பயில அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள்தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விசா நிராகரிப்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மாணவர் விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிவு appeared first on Dinakaran.