சென்னை: 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் 10ம் தேதிக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. நிலையான வழிகாட்டு விதிமுறைகளின்படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும். ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மைத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.