புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் 12, 28 ஆகிய சதவீதங்களை நீக்கிவிட்டு 5, 18 ஆகிய இரு சதவீத நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.
அதேவேளையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் மற்றும் கேசினோ, ரேஸ் கிளப்புகளுக்கு உள்ளீட்டு வரியுடன் (ஐடிசி) 40 சதவீத ஜிஎஸ்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி இருந்தது.