புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார். அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேற்கு ஆசியாவில் குவைத் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகை 43 லட்சம் ஆகும். இதில் இந்திய வம்சாவளியினர் சுமார் 10 லட்சம் ஆகும். அதோடு சுமார் 9 லட்சம் இந்திய தொழிலாளர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர்.