துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதின.
பிற்பகம் 2.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. எனினும் அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் இந்திய வீரர்கள் தடுமாற்றத்தை சந்தித்தனர்.