சென்னை: திமுக ஆட்சி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்று 4 ஆண்டுகள் முடிந்து நேற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோன்று தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post 5ம் ஆண்டில் திமுக ஆட்சி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை appeared first on Dinakaran.