புதுடெல்லி: வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் இந்தியாவுக்கு நேரடி விமான சேவை மீண்டும் இயக்கப்படும் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், கரோனாவுக்கு பிறகும் சீனாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பக்கத்து நாடுகள் மூலமாகவே சீனாவுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.