புதுடெல்லி: இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. சுமார் 36 வகையான புற்றுநோய்கள் காணப்படுகின்றன. உலகில் அதிக புற்றுநோயாளிகள் வாழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும் அமெரிக்கா 2-ம் இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.