சென்னை: தமிழகத்தில் அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இயங்கி வரும் எஸ்என்ஜே டிஸ்டில்லரிஸ், தி.நகரில் இயங்கி வரும் கல்ஸ் டிஸ்டில்லரிஸ் மற்றும் சென்னை பாண்டி பஜாரில் உள்ள அக்கார்டு டிஸ்டில்லரிஸ் மற்றும் விழுப்புரம் மாவட்டம் எல்லிசத்திரம் சாலையில் உள்ள எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான மதுபான அலை மற்றும் கோவை கோவையில் உள்ள சிவா ஆகிய மதுபான உற்பத்தி நிறுவனங்களில் இருந்து அதிகளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த 5 மதுபான நிறுவனங்கள் ஒப்பந்த கொள்முதலை மீறி சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எஸ்என்ஜே மற்றும் கல்ஸ் மதுபான நிறுவனங்களில் மதுபான விற்பனை மூலம் ரூ.450 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தினர்.
அதில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அதிகளவில் பணம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது விசாரணையை விரிவுப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நேரத்தில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் இந்த 5 மதுபான நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக எஸ்என்ஜே டிஸ்டில்லரிஸ், கல்ஸ் டிஸ்டில்லரிஸ் மற்றும் அக்கார்டு டிஸ்டில்லரிஸ் மற்றும் விழுப்புரம் மாவட்டம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான மதுபான அலை மற்றும் கோவை கோவையில் உள்ள சிவா மதுபான உற்பத்தி நிறுவனம் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் 2வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. டாஸ்மாக் நிறுவனத்தின் அலுவலகம் எழும்பூரில் உள்ளது. இந்த அலுவலகத்திலும் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை சோதனை நடந்தது.
The post 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக நீடித்த சோதனை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் தொடர்ந்தது appeared first on Dinakaran.